முகப்பு
இந்தியா

கொச்சியில் இருக்கீங்களா? இனிமே உங்க வீட்டுக்கு உணவு வராது!

ஒருவேளை நீங்கள் கொச்சியில் இருந்தால் உபர் ஈட்ஸ், ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்கள், சுடச்சுட சுவையான உணவோடு உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட மாட்டார்கள்.

Updated On : 1 டிசம்பர், 2018 at 2:41 PM
பகிர்:


கொச்சி: ஒருவேளை நீங்கள் கொச்சியில் இருந்தால் உபர் ஈட்ஸ், ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்கள், சுடச்சுட சுவையான உணவோடு உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட மாட்டார்கள்.

காரணம், செல்போன் செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களை ஏற்கப் போவதில்லை என்று கேரளாவில் உள்ள ஹோட்டல் மற்றும் உணவக நிர்வாகத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், செயலி வழியாக உணவுப்பொருட்களை ஆர்டர் எடுத்து செய்யும் போது மிக சீக்கிரம் செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் உணவின் ருசியில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையும், செயலிகளுக்காக உணவுப் பொருளின் விலையைக் குறைத்துக் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனால்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

Advertisement

எது எப்படியிருந்தாலும் போகும் வழியில் இருக்கும்  ஹோட்டலை மூடி விடுவார்களோ என்று ஓட வேண்டிய அவசியம் இல்லாமல் செயலி மூலம் உணவு வாங்கிக் கொண்டு இதுவரை நிம்மதியாக இருந்தவர்களுக்கு இந்த முடிவு நிச்சயம் வருத்தத்தையே அளிக்கும் என்பதில் சந்தேகம்  இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.