இந்தியா

21 சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பத்திரிகையாளர் கைது

2013 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 21 சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிகையாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ்

DIN


பெங்களூரு: 2013 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 21 சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிகையாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநில முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் உடுப்பி மாவட்டத்தில் 21 சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் சந்திரா கே ஹெம்மடி என்பவர் பிரிலேன்ஸ் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவர் உள்ளூர் பிரச்னைகளை பற்றி எழுத தொடங்கிய அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சில பள்ளிகளுக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். பின்னர் மாணவர்களை புகைப்படம் எடுப்பதாக அழைத்து கொண்டு ஒதுக்குப்புறமான வனாந்தர பகுதிக்கு சென்று அங்கு குழந்தைகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அவர்களை மிரட்டி உள்ளார். 

இதுகுறித்து அவர் மீது 21 சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடுப்பி நகரில் பைந்தூர் போலீஸ் நிலையத்தில் 16 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. கங்குலியில் மூன்று வழக்குகளும், கொலுருவில் ஒன்றும், குண்டபுராவில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும் 2013 ஆம் ஆண்டு  நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பைந்தூரில் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர் 21 சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். 

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரா கே ஹெம்மடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT