இந்தியா

100% அசலைத் திருப்பித் தருகிறேன்; தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்: விஜய் மல்லையா ட்வீட்  

IANS

புது தில்லி: வங்கிகளிடம் வாங்கிய கடனில் 100% அசலைத் திருப்பித் தருகிறேன்; தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா  இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி அள்வுக்கு பணமோசடி செய்து விட்டு, இங்கிலாந்திற்கு தப்பிச் சென்று விட்டார். அவரால் இந்தியாவுக்குக் கொண்டு வர பல்வேறு விசாரணை ஆணையங்கள் மூலமாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் வங்கிகளிடம் வாங்கிய கடனில் 100% அசலைத் திருப்பித் தருகிறேன்; தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்: என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் தெரிவித்திருப்பதாவது:

அரசியல்வாதிகளும் ஊடகங்களும்  நான் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பணத்தை மோசடி செய்து விட்டு ஓடி விட்டதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.அனைத்துமே தவறு. இந்த விவகாரத்தில் ஏன் நான் நியாயமாக நடத்தப்படவில்லை? கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நான் சமர்ப்பித்துள்ள பணம் திருப்பிச் செலுத்தும் விரிவான திட்டம் பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை?வருத்தமாக உள்ளது. 

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது பொருளாதாரச் சிக்கலில் சிக்கி கொண்டதற்கு விமான எரிபொருள் விலைஉயர்வும் ஒரு முக்கிய காரணமாகும். புகழ்பெற்ற கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் தன்னுடைய காலத்தில் மிக அதிக அளவு  கச்சா எண்ணெய் விலையான பீப்பாய்க்கு 140 டாலர் என்ற விலை உயர்வைச் சந்தித்தது.  நஷ்டங்கள் அதிகரித்ததன் காரணத்தால் வங்கிகளின் பணம் செலவழிக்கப்பட்டது. நான் வங்கிக் கடனில் 100% அசலைத் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளேன். தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். 

மூன்று தலைமுறைகளாக இந்தியாவின் பெரிய மதுபான உற்பத்திச் தொழிற்சாலையையை  நடத்திய விதத்தில், அரசு கஜானாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக ஈட்டித் தந்துள்ளோம். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்டியுள்ளது .  ஒரு சிறந்த விமான நிறுவனத்தின் இழப்பு என்ற போதிலும் கூட, வங்கிகளின் கடனில் அசலைத் திருப்பிச் செலுத்த நான் தயாராக உள்ளேன். எனவே இழப்பு இல்லை. தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT