முகப்பு
இந்தியா

தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையா: அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:


புது தில்லி: தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளில் கடன்பெற்றுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய முன்வந்தது அமலாக்கத்துறை.

இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி விஜய் மல்லையா தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.