இந்தியா

கோவா: 2 மாதங்களுக்குப் பின் பொது இடத்துக்கு வந்தார் பாரிக்கர்

DIN

கோவா மாநிலம், பனாஜியில் நடைபெற்று வரும் 2 பாலங்களின் கட்டுமானப் பணியை, முதல்வர் மனோகர் பாரிக்கர் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். கடந்த இரு மாதங்களாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த அவர், தற்போதுதான் பொது இடத்துக்கு வந்திருக்கிறார்.
கணைய நோயால் பாதிக்கப்பட்ட பாரிக்கர், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், சிகிச்சை முடிந்து கடந்த அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி கோவாவுக்கு திரும்பிய அவர், பனாஜியிலுள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். பாரிக்கர், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளாததால், அரசு நிர்வாகம் முடக்கியுள்ளதாகவும், அவரை மாற்ற மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந்நிலையில், மண்டோவி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளையும், ஜுவாரி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணிகளையும் அவர் ஞாயிற்றுக்கிழமை காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதிக்கு பிறகு, தனது இல்லத்திலிருந்து அவர் வெளியே வந்தது இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT