முகப்பு
இந்தியா

பூடான் நாட்டிற்கு 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு 

பூடான் நாட்டின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்குகு 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி  வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

புது தில்லி: பூடான் நாட்டின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்குகு 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி  வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில்,  பூடானின் புதிய பிரதமரான லோதே ஷெரிங் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.  மூன்று நாட்கள் பயணமாக வியாழன் அன்று  தில்லி வந்து சேர்ந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வெள்ளியன்று முறைப்படி பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில் பூடான் நாட்டின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்குகு 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி  வழங்கபப்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 
 
பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, பூடானின் 12-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு, இந்தியா சார்பில், 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் பூடான் பிரதமர் சந்தித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →