இந்தியா

கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரைப் போலவே இருமிக் காட்டி கிண்டல் செய்த பொதுமக்கள் 

தில்லி முதல்வர் கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரைப் போலவே இருமிக் காட்டி பொதுமக்கள் கிண்டல் செய்த சம்பவம் நடந்துள்ளது. 

ANI

புது தில்லி: தில்லி முதல்வர் கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரைப் போலவே இருமிக் காட்டி பொதுமக்கள் கிண்டல் செய்த சம்பவம் நடந்துள்ளது. 

யமுனை ஆற்றை சுத்தப்படுத்தும் ஒன்பது திட்டங்களை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று தில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால், துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நாள்பட்ட இருமல் நோயால் அவதிப்பட்டு வரும் அரவிந்த் கேஜரிவால் கூட்டங்களில் பேசும்போது பேச்சின் இடையிடையே தொடர்ந்து இருமும் வழக்கம் உள்ளவர். 

இந்நிலையில் கேஜரிவால் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அவரைப் போலவே இருமிக் காட்டி பொதுமக்கள் கிண்டல் செய்த சம்பவம் நடந்துள்ளது.   

கேஜரிவால் பேசிக்கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் பக்கமிருந்து சிலர்,  கூட்டங்களில் பேசும்போது பேச்சின் இடையிடையே கேஜரிவால் தொடர்ந்து இருமுவது போல தொடந்து போல் சத்தமுடன் பாவனை செய்தனர். இதன் காரணமாக  அங்கு சலசலப்பு உண்டானது.    

கூட்டத்தினர் அமைதி காக்குமாறு கேஜரிவால் விடுத்த வேண்டுகோளை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே மத்திய அமைச்சர் கட்கரி எழுந்து மைக்கில், 'இது அரசு விழா; கொஞ்சம் அமைதியாகி இருங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் கூட்டம் அமைதியானது. 

பின்னர் கேஜரிவால் பேசும்போது கட்கரியை பாராட்டிப் பேசினார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உன்மேல லவ்ஸ்... ஷில்பா மஞ்சுநாத்!

காலனித்துவ காலத்தில் இருக்கிறோமா? ஓவல் பிட்ச் மோதல் பற்றி முன்னாள் வீரர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

பிளாக்மெயில் வெளியீடு ஒத்திவைப்பு!

உகாண்டா - தெற்கு சூடான் எல்லையில் ராணுவப் படைகள் மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT