இந்தியா

இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் புதன்கிழமை அத்துமீறிப் பறந்ததால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

Raghavendran

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. இங்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி அளிக்கப்படுகிறது. இதனால் எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் சிலரும் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், தற்போது வான்வெளி வழியாகவும் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் என்ற பகுதியின் அருகே புதன்கிழமை காலை 9:45 மணியளவில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி வட்டமிட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இரு நாடுகளின் புரிந்துணர்வுப்படி இருநாடுகளின் எல்லைப் பகுதியில் 10 கிலோ மீட்டர் வரையில் போர் விமானங்களும், ஒரு கிலோ மீட்டர் வரை ஹெலிகாப்டர்களும் பறக்க அனுமதி உண்டு. ஆனால் அதை மீறி தற்போது பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் இந்திய எல்லைப்பகுதியின் அருகில் 300 மீட்டர் வரை பறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT