இந்தியா

மேகாலயாவில் ரயில்வே போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை: போலீஸ்காரர் கைது

மேகாலயாவில் ரயில்வே போலீஸ் உதவி ஆணையர் முகேஷ் தியாகியை சக போலீஸ்காரர் அர்ஜுன் தேஷ்வால் துப்பாக்கியால் சுட்டதில்

DIN

சில்லாங்: மேகாலயாவில் ரயில்வே போலீஸ் உதவி ஆணையர் முகேஷ் தியாகியை சக போலீஸ்காரர் அர்ஜுன் தேஷ்வால் துப்பாக்கியால் சுட்டதில் ஆணையர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரருக்கு கையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேகாலயா மாநிலம் சில்லாங் மாவட்டத்தில், வங்காளதேச நாட்டின் எல்லையையொட்டி உள்ள மவ்கிராவத் என்கிற நகரில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது. இங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ் உதவி ஆணையர் முகேஷ் தியாகி என்பவரை சக போலீஸ்காரரான அர்ஜின் தேஷ்வால் துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழன்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆய்வாளர், பிரதீப் மீனா மற்றும் துணை ஆய்வாளர் ஓம் பிரகாஷ் யாதவ் ஆகியோர் சிறு காயங்களுடனும், மற்றொரு போலீஸ்காரர் ஜோகிந்தர் குமார் கையில் பலத்த காயங்களுடன் இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய அர்ஜூன் தேஷ்வாலை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் எச்.ஜி.ஜி. லங்டோ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT