இந்தியா

கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என்று கூறினாரா பிரகாஷ்ராஜ்?

DIN

பெங்களூரு: கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என்று தான் கூறவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்புத்  தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கருத்து தெரிவித்ததாக தகவல்கள் பரவியது. அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்து கிண்டல் சித்திரங்களும் கருத்துக்களும் பதியப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தகுதி வாய்ந்த ஒரு நபர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக எனது நிலைப்பாடு.  கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல் பேசுபவர்ககளை வரும் தேர்தல்களில் வெற்றி பெற விடமாட்டோம் என்றுதான் நான் அந்த நிகழ்ச்சியில் பேசினேன்.

என்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து எனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் உங்களது பயம் மற்றும் விரக்தி மனநிலையையே தெரியப்படுத்துகிறீர்கள்.

இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT