முகப்பு
இந்தியா

மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லைப் பகுதிகளில் நில நடுக்கம்! 

மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லைப் பகுதிகளில் இன்று நண்பகல் உணரப்பட்ட கடும் நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது. 

Updated On : 7 ஜனவரி, 2018 at 5:27 PM
பகிர்:

இம்பால்: மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லைப் பகுதிகளில் இன்று நண்பகல் உணரப்பட்ட கடும் நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது. 

மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் இன்று நண்பகல் கடும் நில நடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது 6.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்திய நில நடுக்க ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையமானது நிலப்பகுதியிலிருந்து 35 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. .

Advertisement

நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எதுவும் தகவல்கள் வெளியாகவில்லை என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.