இந்தியா

நிச்சயதார்த்த நிகழ்வு நடனத்தில் வாள் வீச்சு: எதிர்பாராமல் மரணமடைந்த சிறுவன்! 

நிச்சயதார்த்த நிகழ்வு நடனத்தின் போது நடந்த வாள் வீச்சில், எதிர்பாராமல் வாள் பட்டு சிறுவன்  மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

IANS

ஹைதராபாத்: நிச்சயதார்த்த நிகழ்வு நடனத்தின் போது நடந்த வாள் வீச்சில், எதிர்பாராமல் வாள் பட்டு சிறுவன்  மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தில் ராய்துர்காம் பகுதியில் கடந்த வாரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு கடந்த 5-ஆம் தேதி அன்று ஹமீத் என்ற சிறுவனின் வீட்டில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அப்பொழுது இளைஞர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து நடனமாடியுள்ளனர். அவர்களுடம் ஹமீதும் நடனமாடியுள்ளான்.

அப்பொழுது ஜூனாயத் என்ற வாலிபர் வாள் ஒன்றை எடுத்து காற்றில் சுழற்றி நடனமாடியுள்ளார். அப்பொழுது எதிர்பாராமல் வாள் பட்டதில்  சிறுவன் ஹமீது காயமடைந்தான். உடனடியாக அவனை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஹமீத் 6-ஆம் தேதி மரணமடைந்து விட்டான்

இதனை அடுத்து ஜூனாயத் மீது இபிகோ பிரிவு 304 பிரிவு இரண்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT