இந்தியா

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் பணியைத் தொடரலாமா? : கேள்வியெழுப்பும் இந்திய பார் கவுன்சில்! 

DIN

புதுதில்லி: சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர்கள் அவர்களின் வழக்கறிஞர் பணியைத் தொடரலாமா என்பது குறித்து சுமார் 500 பேருக்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்ப உள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினைச் சேர்ந்த தலைவர்கள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்து பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, கேடிஎஸ் துளசி, பி சிதம்பரம், விவேக் தான்கா, கே பராசரன், பூபேந்திர யாதவ், மீனாட்சி லேகி, பினாகி மிஷ்ரா, சதிஷ் மிஷ்ரா மற்றும் பாஜகவின் அஸ்வினி குமார் ஆகியோர் சில உதாரணங்கள் ஆவார்கள்.

இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்து கொண்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் வழக்கறிஞர் பணியைத் தொடரலாமா என்பது குறித்து இந்திய பார் கவுன்சில் விரைவில் முடிவெடுக்கவுள்ளது. இது தொடர்பாக முடிவெடுக்கும் பொருட்டு நிபுணர்கள் குழு ஒன்றை இந்திய பார் கவுன்சில் நியமனம் செய்துள்ளது. இக்குழுவானது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் என சுமார் 500 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இந்த நிபுணர்கள் குழுவில் இடம் பெற்று உள்ள வழக்கறிஞர் மனன் குமார் மிஷ்ரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இது தொடர்பான முதல் கட்ட நோட்டீஸ் நாளை நாட்டின் முக்கிய செய்தித்தாள்களில் வெளியாகும், குறிப்பிட்ட நபர்கள் ஒரு வாரத்திற்குள் அவர்களுடைய பதிலைத் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 22-ம் தேதி இறுதி விசாரணை நடைபெற உள்ளது.  ஒருவேளை அவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் அதனை இயற்கை நீதிக்கான கொள்கை மீறப்பட்டது என்று வகைப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT