இந்தியா

"ஜெய்ராம் தாக்குர் ஹிமாசலின் இளம் முதல்வர் அல்ல'

DIN

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் இளம் வயது முதல்வர் ஜெய்ராம் தாக்குர் என்று பாஜக கூறுவதற்கு மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா குமாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவையில், அவர் மேலும் கூறியதாவது:
ஜெய்ராம் தாக்குரின் வயது 53. ஒய்.எஸ்.பார்மர் முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவருக்கு வயது 45. ராம் லால் 48 வயதில் முதல்வரானார். சாந்தகுமார் முதல்வராகும்போது வயது 42 தான். வீரபத்ர சிங் 49-ஆவது வயதிலும், பிரேம் குமார் துமல் 53-ஆவது வயதிலும் முதல்வரானார்கள். எனவே, இந்த மாநிலத்தின் இளம் வயது முதல்வர் ஜெய்ராம் தாக்குர் என்று பாஜக பெருமிதத்துடன் கூறுவது தவறாகும்.
பதவியேற்பு விழாவில் ஆளுநரின் உரை, ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை என்று ஆஷா குமாரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT