இந்தியா

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

DIN


புது தில்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி செய்தியாளர்கள் முன்னிலையில் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மார்ச் 14ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பிப்ரவரி 18ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதே சமயம், மேகாலயா சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் மாதம் 6ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நாகலாந்து சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது.

3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 3ம் தேதி எண்ணப்படும் என்றும், அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT