இந்தியா

சமூக ஊடகங்களில் அதிக ஆர்வம் : மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! 

வீட்டு வேலைகளை செய்யாமல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஆர்வம் காட்டினார்  என்று கூறி  மனைவியை கணவன் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

DIN

கொல்கத்தா: வீட்டு வேலைகளை செய்யாமல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஆர்வம் காட்டினார்  என்று கூறி  மனைவியை கணவன் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள சேட்லா என்னும் பகுதியினைச் சேர்ந்தவர் சுரஜித் பால். இவரது மனைவி தும்பா. இவர் சமூக ஊடகங்களில் அதிக ஆர்வம் காட்டி நிறைய நேரம் செலவழித்து வந்ததாகத் தெரிகிறது. அத்துடன் சமூக ஊடகங்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டு வேறு சிலருடன் தும்பா தொடர்பு வைத்திருப்பதாகவும் சுரஜித் சந்தேகம் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று மதியம் வேலை முடிந்து சுரஜித் பால் வீடு திரும்பியுள்ளார். ஆனால் அவரது  மனைவி தும்பா சமையல் எதுவும் செய்யாமல் சமூக ஊடகங்களில் நேரம் செலவழித்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக சுரஜித் சமையல் செய்யத் துவங்கினார்.

அப்பொழுது இருவருக்குமிடையே திடீரென வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சுரஜித் தன் கையில் வைத்திருந்த கட்டை ஒன்றினால் தும்பாவின் தலையில் தாக்கியுள்ளார். அத்துடன் அவரது கழுத்தினை நெரித்துள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். பின்னர் தனது மாணிக்கட்டினை அறுத்துக் கொண்டு சுரஜித்  தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அது பலன்  அளிக்காமல் கையில் காயம் ஏற்பட்டு, அதற்கு மருந்து போட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

மாலை பள்ளியிலிருந்து திரும்பிய அவர்களது மகன் சயன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது தாயாரைக் கண்டு கொடுத்த தகவலின் பேரால் போலீசார் விரைந்து சென்று சடலத்தினைக் கைப்பற்றியுள்ளனர். அவரகள் தங்கள் விசாரணையை தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில், வியாழன் அன்று சுரஜித் தாமாகவே காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

பின்னர் தொடர்ந்த விசாரணையில் சுரஜித் கடந்த ஆண்டு தும்பாவின் சகோதரியோடு சுரஜித் தொடர்பு வைத்திருந்ததாக, தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அது முதல் தும்பா வீட்டு வேலைகளில் அதிக ஆர்வம் காட்டாமல், சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வந்தார் என்பதும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளத்தில் மூழ்கிய 170 கிராமங்கள்: ஒடிசாவில் 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

3 பிஎச்கே படத்தை ரசித்தேன்! சச்சின்

காதில் தங்க விழுது... பிரியா பிரகாஷ் வாரியர்!

ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!

பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?

SCROLL FOR NEXT