இந்தியா

69-ஆவது குடியரசு தினம்: டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

நாட்டின் 69-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

Raghavendran

நாட்டின் 69-வது குடியரசு தினவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆசியான் கூட்டமைப்புத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணைக் குடியரசுத் துணை தலைவர் வெங்கைய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற குடியரசு தின சிறப்பு அணிவகுப்பை அனைவரும் கண்டு ரசித்தனர்.

அதுபோல, நாடு முழுவதும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார். 

இந்நிலையில், தினமும் உள்ள சிறப்புகளை கௌரவித்து நினைவுபடுத்தும் விதமாக கூகுள் டூடுல் வெளியிடுவது வாடிக்கை. அவ்வகையில் 69-ஆவது இந்திய குடியரசு தினத்தை கௌரவிக்கும் விதமாக கூகுள் இணையதளம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமோ பாரத் ரயில்களில் பிறந்தநாள்களை கொண்டாட என்சிஆா்டிசி ஏற்பாடு

15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை: 2 சிறாா்களுக்கு போலீஸாா் வலை

பூதமங்கலம் தா்கா சந்தனக் கூடு விழா கொடியேற்றம்

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்

வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT