முகப்பு
இந்தியா

துப்பாக்கி முனையில் பணம் திருடிய கொள்ளையன்: திடுக்கிடும் சிசிடிவி விடியோ வெளியீடு

துப்பாக்கி முனையில் குழந்தையை மிரட்டி தந்தையிடமிருந்து முகமுடி கொள்ளையன் பணம் திருடும் திடுக்கிடும் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2018 at 4:56 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:37 PM

இந்தூரில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரவு சுமார் 8:30 மணியளவில் பணம் எடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த முகமுடி அணிந்த கொள்ளையன் ஒருவன் அந்த நபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை திருடுகிறான். மேலும், அந்த நபரின் குழந்தையின் மீது துப்பாக்கி வைத்து மிரட்டி வங்கிக் கணக்கில் மீதமிருக்கும் பணத்தையும் எடுத்து தர மிரட்டுகிறான்.

உடனே அந்த நபர் அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் மீதிப் பணத்தையும் எடுத்து தருகிறார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஜனவரி 24-ம் தேதி நடந்த அந்த திருட்டுச் சம்பவத்தின் திடுக்கிடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.