முகப்பு
இந்தியா

விவசாயிகள் வருமானம்: மோடி மீது ராகுல் தாக்கு

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை விமர்சித்துள்ளார்.

Updated On : 10 ஜூலை, 2018 at 12:55 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை விமர்சித்துள்ளார்.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள விவசாயிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார். அந்த உரையாடலின்போது, தனது விவசாய வருமானம் இரட்டிப்பாகியிருப்பதாக கூறுமாறு சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியைச் சேர்ந்த வேளாண்துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
அந்த விவகாரம் தொடர்பான விடியோ பதிவை ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவில் இணைத்து, மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் உரையாடுவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், தனது மனதின் குரலையே அனைவரும் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புவது இப்போது தான் வெளியே தெரிகிறது. சந்திராமணி தனது விவசாய வருமானம் இரட்டிப்பாகியிருப்பதாகக் கூறுவது உண்மையாகத் தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.