முகப்பு
இந்தியா

இரட்டை இலைச் சின்ன வழக்கு விசாரணை: ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு 

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு தில்லி உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Updated On : 12 ஜூலை, 2018 at 6:48 PM
பகிர்:

புது தில்லி: இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு தில்லி உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இரட்டை இலைச் சின்னம் தொடா்பான வழக்கு தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிடுகையில், ஆட்சியிலும், கட்சியிலும் எங்கள் தரப்புக்கு பெரும்பான்மை உள்ளது. இந்த பெரும்பான்மையின் முக்கியத்துவம் சாசிக் அலி வழக்கிலும், நரசிம்ம ராவுக்கும், என்டி திவாரிக்கும் இடையே ஏற்பட்ட பிளவின்போதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சின்னங்கள் தொடா்பான வழக்குகளில் தோ்தல் ஆணையம் பெரும்பான்மையைக் கருத்தில் முடிவு எடுத்து வருகிறது. அந்த வகையில், இரட்டை இலைச் சின்னம் வழக்கில் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு எங்கள் தரப்புக்கு சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது என்றாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னணி: தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோரின்அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தோ்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பா் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோா் சாா்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாதென அறிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடா்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.