இந்தியா

மீட்புப் பணியின்போது ஹெலிகாப்டர்களை பயன்படுத்த பயணிகளுக்கு கட்டணம்

DIN

உத்தரகண்ட் பிதோரகார்ஹ் மாவட்டத்தில் பேரழிவு சமயங்களில் மீட்புப் பணியின் போது ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவற்கு பயணிகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் பிதோரகார்ஹ் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மீட்புப் பணியின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பேரழிவு நேரத்தில் மீட்புப் பணியின் போது ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவற்கு சாதரண பயணிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நபர் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தினால் அதற்கு கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட ரூ.3,100 செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வர உள்ளது என்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்த உத்தரவுக்கு அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அனுமதி வழங்கியுள்ளார். 

மீட்புப் பணியின் போது மக்களுக்கு, ஒரு அரசு கட்டணம் நிர்ணயித்து உத்தரவு பிறப்பிப்பது இதுவே முதல்முறை.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT