இந்தியா

தில்லியில் குப்பைகளை அகற்ற வழிகள் என்ன? மூத்த வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

DIN

தில்லியில் மலை போல் குவிந்துள்ள குப்பைகள் அகற்றுவதற்கான உகந்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு பரிந்துரை செய்யுமாறு மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்சால்வேஸுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

தில்லியில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. இதனை, அகற்றும் பணிகள் அங்கு சரிவர நடைபெறவில்லை. 

முன்னதாக, தில்லியில் முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநருக்கு இடையிலான அதிகார மோதல் நிகழ்ந்து வந்தது. இதனால், தில்லி பால்ஸ்வா, ஓக்லா, காஜிப்பூர் ஆகிய பகுதிகளில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டியது தில்லி அரசின் பொறுப்பா? அல்லது மத்திய அரசின் பொறுப்பா? என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தில்லியில் குப்பைகளை அகற்றுவது சட்டப்படி மாநகராட்சியின் கடமை. அதற்கான உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளது' என்று குறிப்பிட்டு தில்லி அரசும், துணைநிலை ஆளுநரும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தன.

இதையடுத்து, இந்த வழக்கின் முந்தைய விசாரணையில்  உச்ச நீதிமன்றம் அதிகாரம் துணை நிலை ஆளுநர் வசமே உள்ளதால் துணை நிலை ஆளுநரை கடுமையாக கண்டித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணை திங்கள்கிழமை வந்தது. 

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பீம்ராவ் லோகூர் தலைமையிலான அமர்வு, தில்லியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கான சரியான நடவடிக்கைகளை பட்டியலிட்டு பரிந்துரை செய்யுமாறு தலைமை நீதிபதி கோலின் கோன்சால்வேஸை கேட்டுக்கொண்டது. 

மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2 வார காலத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT