இந்தியா

எந்த ஒரு பிரச்னை குறித்து விவாதிக்கவும் அரசு தயாராக இருக்கிறது: பிரதமர் உறுதி 

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எந்த ஒரு பிரச்னை குறித்து விவாதிக்கவும் அரசு தயாராக இருப்பதாக , பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

IANS

புது தில்லி: நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எந்த ஒரு பிரச்னை குறித்து விவாதிக்கவும் அரசு தயாராக இருப்பதாக , பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது தில்லியில் புதனன்று துவங்கியது. அப்பொழுது நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோசடி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு அனைவரையும் வரவேற்கிறேன். நிறைய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எந்த ஒரு பிரச்னை குறித்து விவாதிக்கவும் அரசு தயாராக இருக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறைய விஷயங்கள் நம்முன் இருக்கின்றன. இது தொடர்பாக அனுபவமிக்க உறுப்பினர்களிடம் இருந்து நல்ல ஆலோசனைகளையும் உரையாடல்களையும் எதிர்பார்க்கிறேன். உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி

தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மன வேதனை காங்கிரஸ் எம்பிக்கு புரிந்திருக்கும்: அதிமுக எம்பி இன்பதுரை

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை புகாா் வரவில்லை- தோ்தல் ஆணையம்

நாடாளுமன்றத் தெருவில் காா் - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT