அச்சே தின்.. ஹிந்தி தெரியாதவர்களுக்கும் இந்த வார்த்தை கடந்த 4 ஆண்டுகளில் ஓரளவுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும். பிரதமர் மோடியின் உரையில் ஒரு முக்கிய அம்சமாக இந்த வார்த்தை இடம்பெற்றிருக்கும்.
நமக்கான அச்சே தின் அதாவது நல்ல நாள் ஆரம்பித்துவிட்டதாக பிரதமர் மோடி தனது பேச்சின் போது குறிப்பிடுவது வழக்கம்.
பிரதமர் மோடியின் பேச்சுக்களையும், உறுதி மொழிகளையும் கடுமையாக விமரிசித்து வரும் காங்கிரஸ் கட்சி தற்போது, இந்த அச்சே தின் என்ற பேச்சை விடியோ மூலம் கிண்டல் செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் அச்சே தின் என்று யாராவது சொன்னால் என பதிவிட்டு ஒரு விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது பற்றி சொன்னால் புரியாது.. விடியோவைப் பார்த்தால் உங்களுக்கேப் புரியும்.
என்ன புரிந்ததா? அச்சே தின் எனப்படும் நல்ல நாளை இப்படித்தான் தேடுகிறார்களாம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.