இந்தியா

ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பந்த் அறிவிப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

ANI

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதையடுத்து அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்தியில் பாஜக அரசுக்கு எதிராக தனது கட்சி தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தார்.

கடந்த முறை இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையில், இம்முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாகக் கூட்டணி அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:

வருகிற 24-ஆம் தேதி செவ்வாய்கிழமை, ஆந்திர மாநிலம் முழுவதும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய பாஜக அரசு நமக்கு செய்துள்ள அநீதியை எதிர்க்கும் விதமாக அமையும். மத்தியில் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் நாங்கள் ஆதரவு அளிப்போம். ஆனால், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது மட்டுமே எங்கள் நோக்கம் மற்றும் கோரிக்கை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

SCROLL FOR NEXT