இந்தியா

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு இலங்கை: பிரதமர் மோடி

தினமணி

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக இலங்கை விளங்கி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் வாயிலாக தங்களது நோக்கங்களை பரஸ்பரம் வென்றெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டமானது இந்தியாவின் உறுதுணையோடு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
 நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இலங்கையுடனான நல்லுறவு குறித்து பல்வேறு விஷங்களை பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 கடந்த ஆண்டு அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தேவையான உதவிகளை அளிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார். அதன்படி, அதற்கான நடவடிக்கைகள் இந்தியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு தற்போது அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய மோடி, இலங்கைக்கு அளித்த வாக்குறுதியை இந்தியா நிறைவேற்றயிருப்பதாகத் தெரிவித்தார்.
 இலங்கை மகிழ்ச்சியை எதிர்கொண்ட தருணங்களிலும், சோதனைகளில் சிக்கித் தவித்த தருணங்களிலும் இந்திய தேசம் உற்ற தோழனாக உடன் நின்றிருக்கிறது என்று கூறிய அவர், இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் தங்களது இலக்குகளை அடைய முடியும் என்று தெரிவித்தார்.
 தெற்காசிய அளவிலும், இந்தியப் பெருங்கடல் பிராந்திய அளவிலும் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாகவே இலங்கை இருந்து வருகிறது என்று பிரதமர் நிகழ்ச்சியில் கூறினார். வளர்ச்சியை நோக்கி பரிணமித்து வரும் புதிய இந்தியாவுக்கு இலங்கை நாட்டவர்கள் அதிக அளவில் வருகை தர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT