கோப்புப்படம் 
இந்தியா

தேவைப்பட்டால் கும்பல் தாக்குதல்களை தடுக்க தனி  சட்டம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தகவல் 

தேவைப்பட்டால் கும்பல் தாக்குதல்களை தடுக்க தனி சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தகவல் தெரிவித்தார்.

IANS

புது தில்லி: தேவைப்பட்டால் கும்பல் தாக்குதல்களை தடுக்க தனி சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தகவல் தெரிவித்தார்.

செவ்வாயன்று மக்களவை கூடியதும் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு கடத்தல்காரர் என்று கூறி இளைஞர் ஒருவர் பசுப்பாதுகாவலர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

இந்த கும்பல் தாக்குதல் சம்பவங்களை நாங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டு மட்டும் இருக்கவில்லை. அதனை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

திங்களன்று மத்திய உள்துறை செயலர் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, கும்பல் தாக்குதல் சம்பவங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவுக்கு நானகு வாரங்களுக்குள் பரிந்துரை செய்யும். .

இந்தியாவில் நடைபெற்ற கும்பல் தாக்குதல் சம்பவங்களிலேயே மிகப்பெரிய தாக்குதல் சம்பவமானது கடந்த 1984-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மரணத்திற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT