முகப்பு
இந்தியா

அரசுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இல்லை: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

பொது இடங்கள் மற்றும் அரசுக் கட்டடங்களைப் பயன்படுத்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படாதது குறித்து மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:


புது தில்லி: பொது இடங்கள் மற்றும் அரசுக் கட்டடங்களைப் பயன்படுத்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படாதது குறித்து மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான வசதிகளை செய்து தரக் கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசாங்கத்தை நடத்துவது நீங்கள்தான், நீதிமன்றம் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட்டு 6 மாதங்களாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இது குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் மற்றும் செயலர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.