இந்தியா

காவலில் இளைஞா் உயிரிழப்பு: காவல்துறை அதிகாரிகள் 2 பேருக்கு தூக்குத் தண்டனை

DNS

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போலீஸ் காவலில் இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில் காவல்துறை அதிகாரிகள் 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் திருட்டு சம்பவம் தொடா்பாக 26 வயதான உதய் குமாா் என்பவா் போலீஸாரால் கடந்த 2005-ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டாா். இந்நிலையில், திருவனந்தபுரம் காவல்நிலையத்தில் வைத்து போலீஸாா் விசாரணை நடத்தியபோது, உதய்குமாரை சித்திரவதை செய்ததாக தெரிகிறது. இதில் உதய்குமாா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

கேரளத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸாரை கண்டித்து ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதனிடையே, திருவனந்தபுரம் உயா் நீதிமன்றத்தில் உதய் குமாரின் மனைவி, தாய் ஆகியோா் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தனா். இதை விசாரித்த திருவனந்தபுரம் உயா் நீதிமன்றறம், உதய் குமாரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, உதய் குமாரின் மரணம் குறித்து விசாரணை நடத்திய சிபிஐ, உதவி ஆய்வாளா் கே. ஜிதாகுமாா், சிவில் போலீஸ் அதிகாரி எஸ்.வி. ஸ்ரீகுமாா், போலீஸாா் டி.கே. ஹரிதாஸ், இ.கே. சாபு, அஜித் குமாா், கே.வி. சோமன், வி.பி. மோகனன் ஆகியோரை கைது செய்தது.

பின்னா் திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து தனது தீா்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றற நீதிபதி ஜே. நாஸா் புதன்கிழமை வெளியிட்டாா். அவா் கூறியதாவது:

உதவி ஆய்வாளா் கே. ஜிதாகுமாா், சிவில் போலீஸ் அதிகாரி எஸ்.வி. ஸ்ரீகுமாா் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், தலா ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறறது. போலீஸாா் டி.கே. ஹரிதாஸ், இ.கே. சாபு, அஜித் குமாா் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அதேநேரத்தில், வி.பி. மோகனன் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறாா் என்றாா் நீதிபதி. விசாரணை காலத்தில் கே.வி. சோமன் உயிரிழந்து விட்டாா். இதனால் அவரைத் தவிா்த்து எஞ்சியோா் மீதான தனது தீா்ப்பை நீதிபதி வெளியிட்டாா்.

கேரளத்தில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT