இந்தியா

உத்தர கர்நாடகா தனி மாநில கோரிக்கைக்கு ஊடகம் தான் காரணம்: குமாரசாமி குற்றச்சாட்டு

ANI

வருங்காலங்களில் உத்தர கர்நாடகா தனி மாநில போராட்டங்கள் நடந்தால் அதற்கு ஊடகங்கள் தான் முக்கிய காரணம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வட பகுதிகளான உத்தர கர்நாடகாவை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி ஆகஸ்டு 2-ஆம் தேதி உத்தர கர்நாடக பிரத்தியேக ராஜ்ய ஹோரத சமிதி எனும் அமைப்பு பந்த் அறிவித்துள்ளது. இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பிரிவினை அரசியலில் ஈடுபட குமாரசாமி முடிவெடுத்துள்ளார். எனவேதான் மஜத கட்சி வெற்றிபெற்ற 37 மாவட்டங்களுக்கு மட்டும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும் விதமாக ஆட்சி நடத்தி வருகிறார். இது ஒட்டுமொத்த கர்நாடகத்துக்கான ஆட்சி கிடையாது. குமாரசாமியின் இந்த அரசியல் காரணமாக தான் தற்போது உத்தர கர்நாடக மக்கள் தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றார்.

அதுபோல பாஜக மூத்த தலைவர் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ கூறுகையில், குமாரசாமியின் அரசு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான அரசாக மட்டுமே செயல்படுகிறது. பல பகுதிகள் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் தான் தற்போது தனி மாநில கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இதேபோன்று உத்தர கர்நாடகப் பகுதியை குமாரசாமி அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தால், இந்த போராட்டத்தில் நானே கலந்துகொள்ள நேரிடும் என்றார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வருங்காலங்களில் உத்தர கர்நாடகா தனி மாநில கோரிக்கை தொடர்பான போராட்டங்கள் நடைபெற்றால் அதற்கு ஊடகங்கள் தான் முக்கிய காரணம். ஊடகங்கள் தான் எரியும் கொள்ளியில் எண்ணெய்-ஐ ஊற்றுகின்றன. உத்தர கர்நாடக மக்கள் கர்நாடக அரசுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர். ஏனென்றால் ஊடகங்கள் தான் என்னை 4 மாவட்டங்களின் முதல்வராக காட்டுகிறீர்கள். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 2 லட்சத்து 18 ஆயிரம் கோடி நலத்திட்டங்களின் ஒரு சிறு பகுதியான 514 கோடியை தான் இந்த மாவட்டங்களுக்கு நான் ஒதுக்கியுள்ளேன். இது என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT