இந்தியா

14 வயது சிறுமிக்கு காவல் நிலையத்தில் சித்ரவதை: உ.பி. டிஜிபிக்கு நோட்டீஸ் 

உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை ஒரு வாரத்துக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைத்து போலீஸாா் சித்ரவதை செய்ததாக புகாா் எழுந்ததையடுத்து, அந்த மாநில காவல் துறை இயக்குநருக்கு (டிஜிபி)....

DIN

புதுதில்லி: உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை ஒரு வாரத்துக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைத்து போலீஸாா் சித்ரவதை செய்ததாக புகாா் எழுந்ததையடுத்து, அந்த மாநில காவல் துறை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் நொய்டா பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி ஒருவரை போலீஸாா் அண்மையில் தடுப்பு காவலில் வைத்ததாகத் தெரிகிறது. வீட்டு வேலை செய்து வந்த அச்சிறுமி சில பொருள்களை திருடிவிட்டதாக வீட்டு உரிமையாளா் ஒருவா் புகாரளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக் கூறப்படுகிறது.

அதன் தொடா்ச்சியாக 8 நாள்கள் அவரைக் காவல் நிலையத்தில் வைத்து போலீஸாா் சித்ரவதை செய்ததாகவும், சிகரெட்டால் காவலா்கள் சூடு வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், உத்தரப் பிரதேச டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்னும் 4 வாரங்களுக்குள் அதுதொடா்பான விளக்கத்தை அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது எத்தகைய நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வருகிறது என்பது தொடா்பான தகவல்களை அளிக்குமாறும் அந்த நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

SCROLL FOR NEXT