இந்தியா

பாஜக அரசு குரைக்கும் அரசு, எதுவும் செய்யாது - மல்லிகார்ஜூன் கார்கே சாடல்

DIN

விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும், வேளாண் விளை பொருள்களுக்கு சரியான விலை நிர்ணயிக்க வேண்டும் மற்றும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் 10 நாள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இதுகுறித்து பேசுகையில்,

"காங்கிரஸ் ஆட்சியிலும், பாஜக ஆட்சியிலும் உள்ள கடன் தள்ளுபடியை ஒப்பிட வேண்டும். நாங்கள் விளம்பரத்தில் ஒரு போதும் ஈடுபட்டதே கிடையாது. எங்களது பணியை செய்துவிட்டு அமைதியாக இருப்போம். 

அதனால் தான் என்னவோ எங்களை அமைதியாக இருக்கிறோம், மியூட் ஆக இருக்கிறோம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். தற்போதைய அரசு குரைக்கும் அரசு, ஆனால் ஏதும் செய்யாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT