கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: சுயேட்சை உட்பட 25 பேர் பதவியேற்பு
கர்நாடகத்தில் அமைந்துள்ள காங்கிரஸ், மஜத கூட்டணி அரசில் சுயேட்சை உட்பட 25 அமைச்சர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கர்நாடகத்தில் அமைந்துள்ள காங்கிரஸ், மஜத கூட்டணி அரசில் சுயேட்சை உட்பட 25 அமைச்சர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இதில் 14 பேர் காங்கிரஸ் மற்றும் 9 மஜத அமைச்சர்கள் ஆவர். மேலும் மஜத கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் எம்எல்ஏ என்.மஹேஷ் மற்றும் இந்த கூட்டணி அரசுக்கு ஆதரவளித்த சுயேட்சை எம்எல்ஏ ஆர்.ஷங்கர் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.
கர்நாடக அரசின் மொத்தமுள்ள 25 அமைச்சர்களும் ஆளுநர் வஜுபாய் ஆர்.வாலா முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். இதில் முன்னாள் கன்னட நடிகையும், காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான ஜெயமாலா, இதில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு பெண் அமைச்சராவார்.
Advertisement
இதில் தேவே கௌடாவின் மகனும், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மூத்த சகோதரருமான ரேவண்ணா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே மகன் ப்ரியங் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.