இந்தியா

கஜகஸ்தான் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு

DIN

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்ற மற்ற நாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அவர், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ், தஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ரஹ்மோன், கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவை ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதில், கஜகஸ்தான் அதிபரை சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கு மோடி அழைப்பு விடுத்தார். 

சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் என்பது 2015-ஆம் ஆண்டு எரிபொருள் பயன்படுத்துதலை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட கூட்டமைப்பாகும். 

மோடியின் இந்த அழைப்புக்கு கஜகஸ்தான் அதிபர் நேர்மறையான பதில் தந்ததாக வெளியுறவுத் துறை செயலாளர் (மேற்கு) ருச்சி ஞானஷ்யாம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT