இந்தியா

நாடாளுமன்ற தேர்தலிலும் மாயாவதியுடன் கூட்டணி: அகிலேஷ் யாதவ் தகவல் 

DIN

லக்னௌ: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் மாயாவதியுடன் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த கைரானா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் தபசும் ஹசனுக்கு  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக ஆதரவு அளித்தன. தேர்தலில் பாஜகவை  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வீழ்த்தின.

இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணிதிரளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் மாயாவதியுடன் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று  நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தலைமை தாங்கி அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணி தொடரும். தேவைப்பட்டால் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கூட, கூட்டணியை கண்டிப்பாக உருவாக்கி, பாஜக தோல்வி அடைவதை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் தனது கட்சித்தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய  பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, 'மரியாதைக்குரிய அளவில் தொகுதிகளை பெற முடியாவிட்டால் சமாஜ்வாதி கூட்டணியில் தொடர மாட்டோம்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT