இந்தியா

நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு புதிய முறை: மத்திய அரசு

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு என புதிய முறையினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.  

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்கு என்று புதிய முறை ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்காக, இதுவரை அவர்கள் வகுப்புகள் எடுக்கும் முறை, பணி மூப்பு மற்றும் ஆராய்ச்சி நூல்கள் வெளியீடு ஆகியவற்றை பொறுத்து பணி உயர்வு அளிக்கும் முறை கையாளப்பட்டு வந்தது.

இனி அதற்குப் பதிலாக புதிதாக தேர்வு முறை ஒன்றினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக நடைமுறையில் இருக்கும் முறையானது முற்றிலுமாக கைவிடப்பட உள்ளது. இந்தப் புதிய முறை வரும் 2022-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT