இந்தியா

மும்பை வெள்ளத்தை சமாளிக்க பயணிகள் ரயிலுக்கு வாட்டர் ப்ரூஃப் எஞ்ஜின்கள்

ENS

மும்பையில் ஏற்படும் கடுமையான வெள்ளத்தை சமாளிக்க வசதியாக, பயணிகள் ரயிலுக்கு வாட்டர் ப்ரூஃப் எஞ்ஜின்களை பொருத்தியுள்ளது மத்திய ரயில்வே.

வெள்ளத்தால் தண்டவாளங்கள் மூழ்கடிக்கப்படும்போது, அதில் இயக்கப்படும் ரயில்கள் சில சமயங்களில் இயங்காமல் நடுவழியில் நிறுத்தப்படும். 

இதனைத் தடுக்க, ரயில் எஞ்ஜினின் மிக முக்கிய பாகமான டிராக்ஷன் மோட்டாரை பாதுகாப்பாக மூடி சீல் வைக்கும் வகையில் புதிய எஞ்ஜின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டிராக்ஷன் மோட்டாருக்குள் தண்ணீர் புக முடியாது.

கடந்த ஆண்டு தண்டவாளத்தில் 4 இன்ச் அளவுக்கு தண்ணீர் தேங்கியபோது, ஏராளமான ரயில்களில் இந்த டிராக்ஷன் மோட்டார் பழுதானது. ஆனால் இந்த முறை 12 இன்ச் அளவுக்கு தண்ணீர் நின்றாலும் ரயில் எஞ்ஜின் பழுதாகாது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT