லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் புதன்கிழமை இரவு கொட்டித் தீர்த்த கன மழையால் 10 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
சிதாபூரில் 6 பேரும், கோண்டாவில் 3 பேரும், பைசாபாத் பகுதியில் ஒருவரும் கன மழைக்கு பலியாகியுள்ளனர்.
கன மழை காரணமாக வீடுகள் இடிந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல பகுதிகளில் மிகப்பெரிய மரங்கள் வேறொடு சாய்ந்தன.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்குமாறும், நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.