இந்தியா

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு

DNS

புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள பிரபல தொழிலதிபா் நீரவ் மோடி மீது 6 பாஸ்போா்ட்டுகளைப் பயன்படுத்தியதாக புதிய வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது.

வைர உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்த நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டாா். அவா் பிரிட்டனுக்குச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவா் வெளிநாட்டுக்குச் தப்பிச் சென்ற பிறகே, வங்கியில் கடன் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவா் மீதும், அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி மீதும் சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நீரவ் மோடி மீது 6 பாஸ்போா்ட்டுகளைப் பயன்படுத்தியதாக புதிய வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT