இந்தியா

கிரீஸ் அதிபர், பிரதமருடன் ராம் நாத் கோவிந்த் சந்திப்பு

DIN

கிரீஸ் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக, கிரீஸ் அதிபர் புரோகோபிஸ் பாவ்லோபெளலோவை அவரது மாளிகையில் சந்தித்த ராம்நாத் கோவிந்த், இருதரப்பு நலன்கள் குறித்து கலந்தாலோசித்தார். அதையடுத்து அந்நாட்டு பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ராம்நாத் கோவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
கிரீஸ் தலைவர்களுடனான சந்திப்பின்போது, இந்தியா-கிரீஸ் இடையேயான வர்த்தக, முதலீடு உறவுகளை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளை ராம்நாத் கோவிந்த் மேற்கோள் காட்டினார். இரு நாடுகளிடையேயான வர்த்தக மதிப்பு ரூ.3,609 கோடியாக இருப்பதாகவும், இந்தியா-கிரீஸின் வளங்களோடு ஒப்பிடுகையில் இந்த மதிப்பு குறைவு என்றும் தெரிவித்த ராம்நாத் கோவிந்த், வர்த்தக உறவை விரிவுபடுத்த மேலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
கிரீஸ் நிபுணத்துவம் பெற்றுள்ள கப்பல் வர்த்தகம், உணவு மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பு, சுற்றுலா ஆகிய துறைகளில் இந்தியா மேம்படுவதற்கான உதவிகளை கிரீஸ் வழங்க இயலும் என்று ராம்நாத் கோவிந்த் சுட்டிக் காட்டினார். அதேபோல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, மனை வணிகம், உள்கட்டமைப்பு துறைகளைச் சேர்ந்த இந்திய நிறுவனங்கள், கிரீஸில் தொழில் தொடங்க ஆவலுடன் உள்ளன என ராம்நாத் கோவிந்த் கூறினார் என்று அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் கிரீஸ் சென்ற முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT