இந்தியா

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: கேரள அரசு

கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

DIN

கேரள மாநிலம் நிபா வைரஸை தொடர்ந்து கனமழையால் மிகவும் பாதிப்படைந்தது. இந்த கனமழையால் ஆங்காங்கே மலைச்சரிவு போன்ற சம்பவங்களால் பல வீடுகள் அடித்தும், பல வீடுகள் சேதமும் அடைந்தன. நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உட்பட 56 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, இந்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. அஃதாவது, இறந்தவர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிலம் முற்றிலும் சேதமடைந்த குடும்பங்களுக்கு 6 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. வீடுகளை முற்றிலுமாக இழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. வீடுகள் ஓரளவு சேதமடைந்த குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்.

இதுமட்டுமின்றி, இந்த பேரழிவை ஆராய்ந்து, வரும் மழைக்காலங்களில் இதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனி கமிட்டியை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT