இந்தியா

யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை; முதல்வர் பதவி ராஜிநாமா: மெஹபூபா முஃப்தி

காஷ்மீர் ஆளுநரிடம் எனது ராஜிநாமாவை கொடுத்து, இனி யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று தெரிவித்ததாக மெஹபூபா முஃப்தி கூறினார்.

DIN

காஷ்மீரில் பிடிபி எனும் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பிடிபி-க்கு 28 சட்டப்பேரவை உறுப்பினர்களும், பாஜகவுக்கு 25 சட்டப்பேரவை உறுப்பினர்களும் இருந்தனர். இந்நிலையில், பாஜக பிடிபி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக இன்று(செவ்வாய்கிழமை) தெரிவித்தது. 

இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வோஹ்ராவிடம் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மெஹபூபா முஃப்தி கூறியதாவது,     

"ஆளுநரிடம் எனது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளேன். இனி யாருடனும் கூட்டணியை நீட்டிக்கப்போவதில்லை என்று ஆளுநரிடம் தெரிவித்துவிட்டேன்.  தொலை நோக்கு பார்வையுடனும், மக்கள் நலனுக்காகவும் தான் பாஜகவுடன் கூட்டணிவைத்தேன். ஆட்சி அதிகாரத்துக்காக பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. பாஜக ஆதரவை துண்டித்ததால் அதிர்ச்சியடைவில்லை. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.  

தற்போதைய சூழலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் அங்கு ஆளுநர் ஆட்சி அமலாகவே பெரும்பாலான வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT