இசைப்புயலின் அடுத்த தூதர் அவதாரம்
சிக்கிம் அரசின் விளம்பர தூதராக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலகப் புகழ் பெறும் வகையில் சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலா தளமாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, இயற்கை விவசாயத்தை முழுவதுமாக அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பிரத்யேக பெருமையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், சிக்கிம் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து தேசிய அளவிலும், உலக அளவிலும் கொண்டு சேர்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அம்மாநில விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிக்கிம் மாநிலத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஏகே ஸ்ரீவஸ்தவா வெளியிட்டார்.
Advertisement
Advertisement
சிக்கிம் அரசு, ஏஆர் ரஹ்மானை முன்னதாக சுற்றுலா மற்றும் வணிக விளம்பர தூதராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.