இந்தியா

சண்டை நிறுத்தத்தை நீட்டிக்காதது ஏன்?: ராணுவ தலைமைத் தளபதி விளக்கம்

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்திலும் பயங்கரவாதிகள் தங்களது தாக்குதல்களைத் தொடர்ந்ததால், சண்டை நிறுத்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதை அடுத்து, முதல்வர் பதவியை மெஹபூபா முஃப்தி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து, மாநிலத்தில் புதன்கிழமை ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே, தில்லியில் புதன்கிழமை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற விபின் ராவத் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
தொடக்கத்தில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். மக்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் ரமலான் நோன்பை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, நோன்புக் காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நோன்புக் காலத்தையும் பாராமல், பயங்கரவாதிகள் தங்களது தாக்குல்களைத் தொடர்ந்தனர். எனவே, சண்டை நிறுத்தத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு எவ்வித அரசியல் தலையீடும் இருந்ததில்லை. மாநிலத்தில் முதல்வரின் ஆட்சி நடைபெற்றாலும், ஆளுநரின் ஆட்சி நடைபெற்றாலும், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றார் விபின் ராவத்.
ஜம்மு-காஷ்மீரில் ரமலான் நோன்பையொட்டி, பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனிடையே, ஒளரங்கசீப் என்ற ராணுவ வீரர், கடந்த வாரம் பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்டார். மேலும், ரமலான் பண்டிக்கைக்கு 2 நாள்களுக்கு முன் ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, மாநிலத்தில் சண்டை நிறுத்தத்தை மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT