இந்தியா

எம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம் - உயர்நீதிமன்றம் ஆணை

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது ஆதார் அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

DIN

கடந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது பிற மாநிலத்தவர்கள் பலர் தமிழக இட ஒதுக்கீட்டில் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து, பிறமாநிலத்தவர்கள் இரட்டை இருப்பிடச் சான்றிதழை பயன்படுத்தி கடந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளதால், கடந்த ஆண்டு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி விக்னயா உள்பட 7 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய தீர்ப்பில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையின் போது ஆதார் அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், மருத்துவ கலந்தாய்வுக்கு மாணவர்களின் ஆதார் கட்டாயம் என இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, கடந்த ஆண்டு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இரட்டைச் சான்றிதழ் பயன்படுத்தியவர்கள் பெயர் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT