இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் நேர்மறையான மாற்றம்: ஜிஎஸ்டி குறித்து மோடி

DIN

தில்லியில் வர்த்தகத் துறைக்கு என வானிஜ்யா பவன் எனும் புதிய அலுவலகம் இந்தியா கேட் அருகில் அமைக்கப்படவுள்ளது. இது 4.33 ஏக்கர் நிலத்தில் ரூபாய் 226 கோடி ரூபாய் செலவில் 1000 அதிகாரிகள் வரை இடம்பெறும் வகையில் கட்டப்படவுள்ளது. இந்த அலுவலகத்தில் தாள்களே பயன்படுத்தாது முழுவதும் தொழில்நுட்பம் முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது.  

இதற்காக நிறைய மரங்களை அழிக்காமல் இருப்பதற்காக இந்த கட்டிடத்தின் கட்டமைப்பு பசுமை தரத்தில் உள்ளது. அரசு பணிகளிலும் இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்பதை குறிக்கும் வகையிலும் அமைக்க திட்டமடப்பட்டுள்ளது.  

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற மோடி பேசியதாவது, 

"வானிஜ்யா பவன் அலுவலகத்தை கட்டும் பணி டிசம்பர் 2019-க்குள் நிறைவடையும் என்று நம்புகிறேன். தொழில்நுட்பங்கள் வர்த்தகத்தை எளிதில் செய்வதற்கு வழிவகுத்துவிட்டது. வரும் ஆண்டுகளில் இது மேலும் வளர்ச்சி அடையும். பொருளாதாரம் மற்றும் நிதி செயல்பாடுகளில் ஜிஎஸ்டி நேர்மறையான மாற்றத்தை கொண்டுவந்துள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT