இந்தியா

சுடுகாட்டிலேயே ஓர் இரவு தங்கிய எம்.எல்.ஏ.,: என்ன காரணம் தெரியுமா? 

DIN

ஹைதராபாத்: சுடுகாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பயத்தினை போக்குவதற்காக, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி  எம்.எல்.ஏ ஒருவர்  சுடுகாட்டிலேயே ஓர் இரவு தங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி  எம்.எல்.ஏவாக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. இவர் பாலகோல் நகரத்தில் மோசமான நிலையில் உள்ள சுடுகாடு ஒன்றில் பூங்கா, கழிப்பறை மற்றும்  குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த விரும்பினார். அதற்காக பல்வறு ஒப்பந்தக்காரர்களை அணுகினார். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை.

இறுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒப்பந்தக்காரர் ஒருவர் சம்மதித்து பணிகள் துவங்கின. ஆனால் அங்கு பேய் இருப்பதாக பணிபுரிந்த தொழிலாளர்கள் அஞ்சியதால் பணிகள் தடைப்பட்டு இருந்தன. எனவே அவர்களின் பயத்தினை போக்குவதற்காக நிம்மல ராவே அங்கு ஒர் இரவு தங்குவதாக முடிவெடுத்தார்.  

அதன்படி நிம்மல ராம நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை சுடுகாட்டில் படுத்து தூங்கியுள்ளார். வீட்டில் இரவு உணவை முடித்து விட்டு சுடுகாட்டிற்கு சென்றவர், அங்கு கட்டில் ஒன்றை போட்டு படுத்து உறங்கியுள்ளார். அத்துடன் சனிக்கிழமை காலை அங்கு வந்த தொழிலாளர்களிடம் பேசிய அவர், அவர்கள் நம்பும் பொருட்டு இன்னும் சில இரவுகளையும் அங்கு செலவழிக்கத் தயராக இருப்பதாக உறுதி அளித்தார்.

எம்.எல்.ஏ நிம்மல ராம நாயுடுவின் இந்த செயலை, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் பாராட்டி உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ராம நாயுடுவின் இந்த முயற்சிகள் வெறுமனே ஒரு உள்ளூர் விவகாரம் அல்ல  அற்பமான சடங்குகள் மற்றும் பரவலான மூடநம்பிக்கைக்கு   எதிரான அவரது இந்த போராட்டம் தேசிய கவனத்தை ஈர்க்க வேண்டும்' எனது தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT