இந்தியா

ஜூலை 1-ஐ ஜிஎஸ்டி தினமாக அனுசரிப்பு - மத்திய அரசு முடிவு

ஜூலை-1 ஆம் தேதியை ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சியில் அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைத் தொடங்கி வைத்தனர்.

‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அப்போது அமலில் இருந்த 12-க்கும் மேற்பட்ட வரிகள் முடிவுக்கு வந்தன.

வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

தில்லி அம்பேத்கர் பவனில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், வர்த்தக சங்கங்கள், வரித் துறை அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். 

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்ற இருக்கிறார். 

சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிச் சீா்திருத்தமாக ஜிஎஸ்டி கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் தனுஷுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?

இந்தியாவில் 9 பிரிட்டன் பல்கலைக்கழக வளாகங்கள் அமைக்கத் திட்டம்: பிரதமர் மோடி

பிகார் தேர்தல் பணிகளில் 8.5 லட்சம் அதிகாரிகள்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு!

மாலத்தீவில்... ஆமிரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT