லாலு பிரசாத் யாதவின் மகன் அறிமுகமாகும் ஹிந்தித் திரைப்பட போஸ்டர் வெளியீடு
பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹிந்தித் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பாட்னா: பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹிந்தித் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். பிகாரின் முந்தைய கூட்டணி ஆட்சியின் பொழுது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள அவர் அப்பொழுதே போஜ்புரி மொழித் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தேஜ் பிரதாப் ஹிந்தியில் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "ருத்ரா - தி அவதார்" என்று படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் அவர் குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் 'கம்மிங் சூன்' என்ற வாசகமும் காணப்படுகிறது.