முகப்பு
இந்தியா

ராணுவத்துக்கு எதிராக கருத்து? குலாம் நபி ஆசாத் மீது தேச துரோக புகார்

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மீது தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தேச துரோக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:05 PM
கோப்புப்படம்
பகிர்:

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ராணுவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை வழக்கறிஞர் சசி பூஷண் அளித்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவின்படி, குலாம் நபி ஆசாத் மீது இந்திய குற்றவியல் பிரிவு 124 (தேச துரோகம்), 120பி (குற்றவியல் சதித்திட்டம்) மற்றும் 505(1) (ராணுவம்/கடற்படை/விமானப்படை அதிகாரி குறித்து வதந்திகளை பரப்பி கலகத்தை உண்டாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த வழக்கு நாளை (சனிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. 

வழக்கறிஞர் அளித்த புகாரின்படி, ஜூன் 22-ஆம் தேதி குலாம் நபி ஆசாத், 'காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகளைவிட நிறைய அப்பாவி மக்களையே ராணுவம் கொலை செய்கிறது' என்று கூறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →